தவெக அரசு மீது வீண் பழி சுமத்தும் திமுக! மூன்று மடங்கு கட்டண உயர்வு என்பது பொய்

 
ச்

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரவும் செய்தி தவறானது.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணத்தை த.வெ.க அரசு மூன்று மடங்கு உயர்த்தியுள்ளதாகவும், இதற்கு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்ட இந்தக் கட்டண உயர்வுக்குப் பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் கண்டனம் தெரிவித்து வருவதாக கலைஞர் செய்திகள் பதிவிட்டிருந்தது.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரவும் செய்தி தவறானதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது தொடர்பாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிர்வாக அலுவலகத்தை (Administrative Office) யூடர்ன் தரப்பில் இருந்து தொடர்புகொண்டு பேசியதில், "கலையரங்கம், நூல் வெளியீட்டுக்கூடம்,  மாநாட்டுக்கூடம் மற்றும் திறந்தவெளியரங்கம் ஆகியவற்றின் வாடகைக் கட்டணத்தில், இன்றைய தேதி வரை எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. மேற்கண்ட அரங்குகளுக்கு எந்தவித கட்டணமும் உயர்த்தப்படவில்லை" என்று தெரிவித்தனர்.