பிரபல தமிழ் நடிகையின் ஆபாச போட்டோ வெளியிட்ட மூவர் கைது..!!
நடிகை ருக்மினி வசந்த் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ உண்மையல்ல என்றும், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்றும் ருக்மினி வசந்த் விளக்கம் அளித்தார்.
மேலும், இந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என வலியுறுத்திய அவர், சம்பவம் தொடர்பாக பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். தனது கவுரவத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் மர்மநபர்கள் இந்த வீடியோவை உருவாக்கியுள்ளதாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்ற எண் 36/2026 பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, உள்ளடக்கத்தை உருவாக்கி பரப்பிய குற்றவாளிகளை கண்டறிய ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் ருக்மிணி வசந்தை ஆபாசமாக Deep fake செய்த 3 பேரை கர்நாடக சைபர் போலீஸ் கைது செய்துள்ளது.குற்றம் சாட்டப்பட்ட ரவிக்குமார், சந்திரகாந்த், ரஞ்சித் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

