முதல்வர் ஆசையில் கட்சி தொடங்கியவர்கள் இன்று... - முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

 
cm stalin
 முதல்வர் ஆசையில் சிலர் கட்சித் தொடங்கினார்கள்;  அடுத்த முதல்வர் நான்தான் எனக் கூறி கட்சித் தொடங்கிய சிலர் தற்போது அனாதையாக உள்ளனர் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை சின்னியம்பாளையத்தில் பிருந்தாவன் ஹாலில்  இன்று மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.  மாற்றுக் கட்சியை சேர்ந்த 6000 பேர் இன்று திமுகவில் இணைந்துள்ளனர்.  இதில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “தேர்தலில் போட்டியிட அல்ல மக்கள் பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் திமுக.இந்திரா காந்தி காலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்ததால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறி 1991ஆம் ஆட்சி மீண்டும் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

MK Stalin

தற்போது மதம், சாதி மூலம் சிலர் தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி திமுக ஆட்சியைக் கலைக்கப் பார்க்கிறார்கள் . மேலும் அவர் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியடை இன்றே களமிறங்குங்கள்.  நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாடும் நமதே, நாளையும் நமதே என்கிற உறுதியுடன், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் இன்றே தேர்தல் பணியில் களமிறங்குங்கள். சென்ற முறை 39 தொகுதிகளில் வென்றோம், இந்த முறை மொத்தமாக 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும்” என்று  கூறினார்.