அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களுக்கு பதவி..!

 
1

முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில் பல்வேறு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளிலிருந்து தவெகவுக்குச் சென்றவர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தவெக முதன்மை செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல திமுக இலக்கிய அணிச் செயலாளராக இருந்து தவெகவுக்கு அணி மாறிய வி.பி.கலைராஜனுக்கும் முதன்மை செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.தவெகவில் இணைந்த இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மூத்த தலைவர் சி.மகேந்திரனுக்கும் இதே பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல புகழேந்தி மற்றும் ஜவஹர் அலி ஆகியோருக்கும் முதன்மை செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சசிரேகா, அமெரிக்கை நாராயணன் உள்ளிட்டோர் தவெக தேசிய செய்தித் தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பெலிக்ஸ் ஜெரால்ட், வழக்கறிஞர் சத்யகுமார், விக்னேஸ்வரன், தேன்மொழி பிரசன்னா, நாராயணன், சசிரேகா, செல்வக்குமார், விவேக் கணநாதன் ஆகியோர் தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.முகில் வீரப்பன், இன்பராஜ், முஹமது இப்ராஹிம், ஜெகதீசபாண்டியன், ஜெயக்குமார், கந்தசாமி, ஜலீல், தேவகுமார், சவுந்தரராஜா மாநில செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், கட்சியின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின் படியும் புதிய நிர்வாகிகள் பணிகள் மேற்கொள்வார்கள். கட்சியினர் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என தமிழக வெற்றிக்கழத்தின் தலைவரும், முதல்வருமான விஜய் உத்தரவிட்டுள்ளார்.