10th, 12th, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..! சகி பெண்கள் சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..!

 
1

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சேலம் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (Sakhi One Stop Centre) ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள Case Worker, Security Guard மற்றும் MultiPurpose Helper ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விவரங்கள் தகவல்கள்
நிறுவனம் One Stop Centre (OSC), Salem
சேலம் சகி பெண்கள் சேவை மையம்
வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைகள் 2026
பணியின் பெயர் Case Worker, Security Guard, MultiPurpose Helper
மொத்த காலியிடங்கள் 8
பணி வகை ஒப்பந்த அடிப்படையில்
பணியிடம் சேலம் மற்றும் ஆத்தூர்
விண்ணப்பிக்கும் முறை Offline
சம்பளம் ரூ.12,000 – ரூ.18,800
கல்வித் தகுதி 10th / 12th / Degree / Master’s Degree
தொடங்கும் தேதி 06.11.2026
கடைசி தேதி 27.11.2026 – மாலை 5.00 மணி
அதிகாரப்பூர்வ இணையதளம் https://salem.nic.in/

Salem OSC Recruitment 2026 – காலியிடங்கள் விவரம்

சேலம் One Stop Centre (OSC) அலுவலகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பதவியின் பெயர் காலியிடங்கள் பணியிடம்
Case Worker 5 சேலம் – 2, ஆத்தூர் – 3
Security Guard 2 சேலம் – 1, ஆத்தூர் – 1
MultiPurpose Helper 1 சேலம் – 1
மொத்தம் 8 சேலம் மற்றும் ஆத்தூர்

Salem OSC Recruitment 2026 – கல்வித் தகுதி

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பதவிக்கு ஏற்ப கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும்.

1. Case Worker

  • BSW / MSW / Counselling Psychology (Social Work மற்றும் Psychology தொடர்பான துறைகள்) ஆகியவற்றில் Bachelor’s Degree அல்லது Master’s Degree பெற்றிருக்க வேண்டும்.
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் பணிகளில் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் Psychological Counsellor ஆக 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
  • 24 மணி நேர சேவை வழங்கும் வகையில் சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும்.

2. Security Guard

  • 10th அல்லது 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அரசு அல்லது தனியார் அலுவலகத்தில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • உள்ளூர் பகுதியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • 24 மணி நேர சேவை வழங்கும் வகையில் சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும்.

3. MultiPurpose Helper

  • 10th அல்லது 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அரசு அல்லது தனியார் அலுவலகத்தில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • உள்ளூர் பகுதியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • நன்றாக சமையல் செய்யத் தெரிந்த பெண் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்.
  • 24 மணி நேர சேவை வழங்கும் வகையில் சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும்.

வயது வரம்பு

பதவியின் பெயர் வயது வரம்பு
Case Worker 23 வயதுக்கு மேல் மற்றும் 40 வயதுக்குள்
Security Guard 21 வயதுக்கு மேல் மற்றும் 40 வயதுக்குள்
MultiPurpose Helper 21 வயதுக்கு மேல் மற்றும் 40 வயதுக்குள்

சம்பள விவரம்

சேலம் மாவட்ட சகி பெண்கள் சேவை மையம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பதவிக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும்.

பதவியின் பெயர் மாத சம்பளம்
Case Worker ரூ.18,800
Security Guard ரூ.12,000
MultiPurpose Helper ரூ.12,000

தேர்வு செய்யும் முறை

இந்த தமிழ்நாடு அரசு சகி பெண்கள் சேவை மையம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கீழ்க்கண்ட தேர்வு முறையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Shortlisting
  • Interview

முக்கிய தேதிகள்

நிகழ்வு தேதி
விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 06.11.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.11.2026 – மாலை 5.00 மணி

எப்படி விண்ணப்பிப்பது?

சேலம் மாவட்ட சகி பெண்கள் சேவை மையம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.

  1. சேலம் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளமான https://salem.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  2. Recruitment பகுதியில் Salem OSC Recruitment 2026 அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
  3. விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து, தேவையான விவரங்களை சரியாக நிரப்பவும்.
  4. விண்ணப்பத்துடன் தேவையான கல்விச் சான்றிதழ்கள், பணி அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களின் நகல்களை இணைக்கவும்.
  5. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலக முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
  6. விண்ணப்பம் 27.11.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் அலுவலகத்தை சென்றடைய வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Room No. 126, District Social Welfare Office, Salem District.