விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்டம் கூடாததால் பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி..!
புதுச்சேரி விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என தவெக தரப்பில் கூறப்பட்டிருந்தது. பாஸ் உடையவர்களுக்கு (QR Code) மட்டுமே அனுமதி எனக் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது திடலுக்கு வெளியே காத்திருந்த அனைவரும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அனைவரையும் உள்ளே விடக்கோரி தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் கூடாததால் பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
மேலும் க்யூஆர் கோட் அனுமதிச் சீட்டு இல்லாத தொண்டர்கள் சிலரை அனுமதிக்கக் கோரி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்பி ஈஷா சிங்கிடம் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த எஸ்பி ஈஷா சிங், “நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு நீங்கள் சொல்லித் தராதீர்கள். உங்களால் பலர் இறந்துள்ளார்கள்.” என ஆக்ரோஷமாக பேசும் விடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.


