திமுக கூட்டணியில் பிளவு என கணக்கு போட்டவர்களுக்கு மூக்கு அறுபட்டது - திருமா..

 
8 மணிநேர வேலையை மீண்டும் உறுதிப்படுத்திய முதல்வருக்கு நன்றி- திருமாவளவன்

திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என அரசியல் கணக்கு போட்டவர்களின் மூக்கு அறுபட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

ரெட்டமலை சீனிவாசனின் நினைவு நாளையொட்டி சென்னை ஓட்டேரி இடுகாட்டில்  உள்ள அவரது நினைவிடத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் பெரியார் திடலில் மரியாதை செலுத்தியதை கண்டு மிகவும் மகிழ்ச்சியுற்றேன். அதைப் பாராட்டி சமூக ஊடக பக்கங்களிலும் பதிவு செய்து இருக்கிறேன். சமூக நீதிப் பார்வையோடு விஜய் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார் என்பது மகிழ்ச்சி அளிப்பதுடன் மிகுந்த நம்பிக்கையையும் அளிக்கிறது. பெரியார் அரசியல் என்பது திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளுக்கு மட்டுமல்ல, சமூகநீதி மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்குமானது. சமத்துவத்தை நாடும் அனைவருக்குமானது, அந்த புரிதல் விஜய்க்கு இருப்பதைக் கண்டு உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன், வரவேற்கிறேன் பாராட்டுகிறேன். 

திருமா

பெரியார் என்ற சொல் பாஜகவிற்கு பிடிக்காது; ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் பெரியார் என்ற சொல்லையே உச்சரிக்க மாட்டேன் என்று வெளியேறியவர். அந்த அளவிற்கு பாஜகவினருக்கு பெரியார் மீது ஒரு வெறுப்பு உள்ளது. மூக்கு அறுபட்டவர்களின் கூச்சல்  புலம்பல் இது.  பாஜக எதிர்பார்த்தது நடக்கவில்லை, தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளது. இப்போது தேர்தல் கணக்கு,  கூட்டணி கணக்கு என்று கூப்பாடு போட்டார்கள்; கூச்சல் எழுப்பினார்கள். எப்படியாவது கூட்டணியில் விரிசல் பிளவு ஏற்படாதா என்று காத்து கிடந்தார்கள். எதிர்பார்த்து இருந்தார்கள் ஏமாந்து போனார்கள் அதனால் ஏற்பட்ட விரக்தி வெளிப்படுகிறது.   

விசிகவும் திமுகவும் ஒரே நேர்கோட்டில் கொள்கையளவில் பயணிக்கிறது.  முரண்பாடான அரசியல் தான்; ஆனால் இணைந்து பயணிப்போம் என்கிற முடிவு கொள்கை தளத்தில் இருவரும் இணையாக இருக்கிறோம்  என்று உணர்த்துகிறது. திமுகவும் விடுதலை சிறுத்தைகளும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது, விசிக தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கை வேண்டும் என்று சொல்கிறோம்.திமுக விற்கும் அதில் உடன்பாடு உள்ளது.  அன்றே அண்ணா அந்த கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.  தேசிய கல்விக் கொள்கையை ஏற்றாக வேண்டும் என்று எதுவும் கிடையாது” என்று  கூறினார்.