தீபாவளிக்கு சொந்த ஊர் போகிறவர்கள் கவனிங்க...
தீபாவளி பண்டிகையை ஒட்டி, விரைவு ரயில்களில், வரும் 6ம் தேதி டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளது.
தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 6-ஆம் தேதி தொடங்குகிறது. தற்போது 60 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளதால், பண்டிகைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்க்க பயணிகள் விரைவாக முன்பதிவு செய்துகொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
நவம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை தீபாவளி. இதற்காக சொந்த ஊர் செல்லும் பயணிகள் முன்கூட்டியே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். நவம்பர் 5 பயணத்திற்கு - செப்டம்பர் 6, நவம்பர் 6 பயணத்திற்கு - செப்டம்பர் 7 முன்பதிவு செய்ய வேண்டும், திரும்பும் பயணத்தில் நவம்பர் 9-க்கு - செப்டம்பர் 10, நவம்பர் 10-க்கு - செப்டம்பர் 11 முன்பதிவு செய்ய வேண்டும். ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும். தேவையான விவரங்களைத் தயாராக வைத்திருந்து முன்பதிவு செய்யலாம்.

