மருதமலை கோயிலுக்கு காரில் வருபவர்களுக்கு அனுமதி இல்லை

 
அமாவாசை முன்னிட்டு இன்று மருதமலை உள்பட 4 கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து – கோவை ஆட்சியர்! அமாவாசை முன்னிட்டு இன்று மருதமலை உள்பட 4 கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து – கோவை ஆட்சியர்!

மருதமலை முருகன் கோயிலுக்கு காரில் வருபவர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருதமலை

முருகப் பெருமானின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா ஏப்ரல் 4 ஆம் தேதி காலை நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். குடமுழுக்கு நடைபெற்றதில் இருந்து மருதமலை முருகன் கோயிலுக்கு ஏராளமானோர் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த வண்ணம் உள்ளனர். மேலும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாகவே உள்ளது. 

இந்நிலையில் மருதமலை முருகன் கோயிலுக்கு காரில் வருபவர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. விசேஷ தினங்களில் மருதமலை முருகன் மலைக்கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் பக்தர்கள் படிக்கட்டுகள் மற்றும் கோயில் பேருந்தை பயன்படுத்துமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.