காதலிக்க கூறி ஆபாச செய்கை: தூத்துக்குடி இளைஞரை அலேக்காக தூக்கிய 'சிங்கப்பெண்' போலீஸ்!

 
Q

தூத்துக்குடி சேர்ந்தவர் சொக்கலிங்கம் சமையல் வேலை பார்த்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி மனைவியை பிரிந்து விவாகரத்து ஆகி வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சொக்கலிங்கம் கல்லூரியில் படிக்கும் சிறுமிக்கு தொடர்ந்து தன்னை காதலிக்க சொல்லி லவ் டார்ச்சர் கொடுத்ததுடன் ஆபாச செய்கைகள் காமித்து தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தந்தையிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மாணவியின் தந்தை சிங்கப்பெண் அதிரடிப்படை இலவச அழைப்பான 1091 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு சொக்கலிங்கம் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து செக்காரக்குடி கிராமத்திற்கு சென்ற சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை செய்து கல்லூரிக்கு செல்லும் சிறுமிக்கு தொந்தரவு அளித்த சொக்கலிங்கத்தை கைது செய்து தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி சொக்கலிங்கத்தை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.