தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்..!!

 
1

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "இந்தியாவின் முதல் துறைமுகமாக ISO 50001:2018 சான்றிதழைப் பெற்றிருப்பது துறைமுகத்திற்கு முக்கியமான சாதனை. எரிசக்தியை பொறுப்புடன் பயன்படுத்துதல், எரிசக்தி செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் நிலையான வளர்ச்சியில் துறைமுகம் கொண்டுள்ள உறுதியை இந்தச் சான்றிதழ் எடுத்துக்காட்டுகிறது.

மத்திய அரசின் ‘ஹரித் சாகர்’ பசுமை துறைமுக வழிகாட்டுதல்களுக்கு ஏற்பவும், 2070-ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கியும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் எரிசக்தி திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், எரிசக்தி மேலாண்மை அமைப்பிற்கான சர்வதேச தரநிலைப்படுத்தல் அமைப்பின் ISO 50001:2018 சான்றிதழை பெற்ற இந்தியாவின் முதல் துறைமுகம் என்ற பெருமையை தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் பெற்றுள்ளது.