தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு கட்டாயம் நேரடி பொதுத்தேர்வு நடத்தப்படும்.. - அமைச்சர் அன்பில் மகேஷ்..

 
5ஆம் மற்றும் 8ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு 


தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பல மாநிலங்களில்  இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  பள்ளி கல்லூரி மாணவர்கள்  அதிகளவு கொரோனாவால் பாதிக்கப்படுவதால் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகளை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே கடந்த கல்வியாண்டில்  10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.  மேலும் நடப்புக் கல்வியாண்டில் இருந்து 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வையே ரத்து செய்ய பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக நடப்புக் கல்வியாண்டிலும் 10 மற்றும் 12 ஆம்  வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமோ என்ற கேள்வி எழுந்து வருகிறது.  

ஆனால் இந்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.   இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் கலைஞர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் இதனை தெரிவித்தார்.  

அன்பில் மகேஷ்

மேலும் அவர் கூறியதாவது, “ 15 முதல் 18 வயதுடைய  சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதால், நடப்புக் கல்வியாண்டிக் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு கட்டாயம் நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில்  2 லட்சத்து 34 ஆயிரத்து 175 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.