இப்படி யாருக்கும் நடக்க கூடாது..! போலி டாக்டரால் பெண்ணுக்கு நடந்த கோரம்..!
உ.பி-யில் வசித்து வருபவர் முனிஷ்ரா ராவத். இவருடைய கணவர் பதே பகதூர். இந்நிலையில், ராவத்துக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனால் பக்கத்தில் இருக்கும் ஸ்ரீ தாமோதர் அவுஷதாலயாவுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
பெண்ணின் வலிக்கு சிறுநீரக கல்தான் காரணம். அதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு ரூ.25 ஆயிரம் செலவாகும் என கிளினிக்கின் உரிமையாளர்களாக ஞான பிரகாஷ் மிஷ்ரா மற்றும் விவேக் மிஷ்ரா கூறினார்.அடுத்த நாள் யூ-டியூப் பார்த்தபடி பிரகாஷ் அறுவை சிகிச்சை செய்ய தொடங்கியுள்ளார். அப்போது போதையில் இருந்துள்ளார். இதனால், பெண்ணின் வயிற்றில் உள்ள பல்வேறு நரம்புகளை கத்தரித்து இருக்கிறார். இதில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உள்ளன. அடுத்த நாள் அதிக வலியால் அலறி, துடித்த ராவத் உயிழந்தார்.
இதுபற்றி பகதூர் போலீசில் புகார் அளித்து உள்ளார். போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ராவத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.கிளினிக் உரிமையாளர்கள் இருவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.


