இந்த சீசனும் கப் நமதே..! கோப்பையை வென்றது பெங்களூரு..!
பெங்களூரு அணி, 5 வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி.- 2022 சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: வெங்கடேஷ் ஐயர், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் சலாம் டார், ஜேக்கப் டஃபி, ரொமாரியோ ஷெப்பர்ட்
குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், ராகுல் தெவாடியா, ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷத் கான்/ஆர் சாய் கிஷோர்
டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் குஜராத்தை பேட் செய்ய அழைத்தார். ஹேசில்வுட், புவனேஷ்வர், ரஷீ்க் சலார், குருணல் பாண்ட்யாவின் அபார பந்துவீச்சால் 155 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதையடுத்து, 156 ரன்கள் என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது.
ஆர்சிபி அணிக்காக விராட் கோலி - வெங்கடேஷ் ஐயர் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் மிகவும் அபாரமாக ஆடினர். முகமது சிராஜுன் பந்துவீச்சால் காலில் ஏற்பட்ட காயத்துடன் ஆடிய வெங்கடேஷ் ஐயர் அதிரடியாகவே ஆடினார். அவர் பவுண்டரியும், சிக்ஸரும் விளாச மறுமுனையில் விராட் கோலியும் அதிரடி காட்டினார். அவர் ரபாடா வீசிய பவுண்டரிகளும், சிக்ஸரும் விளாசினார்.
அபாரமாக ஆடிய வெங்கடேஷ் ஐயர் முகமது சிராஜ் பந்தில் அவுட்டானார். அவர் காயத்துடன் ஆடி 16 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 32 ரன்கள் விளாசி அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய தேவ்தத் படிக்கல் ரபாடா பந்தில் 1 ரன்னில் அவுட்டானார்.
இதன்பின்னர், விராட் கோலியுடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தனர். நெருக்கடியான சூழலில் இணைந்த இந்த ஜோடி மிகவும் நிதானமாக ஆடியது. ரஷீத்கான் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்ததால் அவருக்கே கேப்டன் கில் வாய்ப்பு கொடுத்தார். இதனால், அவரது பந்தை நிதானமாகவே இவர்கள் ஆடினார்கள். ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விளாசினார்.
மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய விராட் கோலி 25 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த டிம் டேவிட் சிக்ஸர், பவுண்டரி விளாசி அழுத்தம் இல்லாமல் அணியை கொண்டு சென்றார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டிம் டேவிட் 17 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 24 ரன்களுடன் அவுட்டானார். வெற்றிக்கு கடைசி 30 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே ஆபர்சிபிக்கு தேவைப்பட்டது.
கடைசியில் 18வது ஓவரின் முடிவில் விராட் கோலி சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார்.
இதன்மூலம் ஆர்சிபி அணி இரண்டாவது முறையாகவும், தொடர்ச்சியாக 2வது முறையாகவும் ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது. 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது. விராட் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 42 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 75 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் இருந்தார். ஜிதேஷ் சர்மா 14 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

