குழந்தைகளின் உயிரோடு விளையாடினால் இதுதான் கதி: சத்துணவு ஊழியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை!

 
1

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்படும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்றில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு நேற்று மதியம் வழக்கம்போல மதிய உணவு வழங்கப்பட்டது. இதனை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே அவர்களில் சிலர் மயக்கம் போட்டு விழுந்துள்ளனர்.  அதேசமயம் சில மாணவர்களுக்கு வாந்தியும் ஏற்பட்டுள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மருத்துவ குழுவினர் பள்ளிக்கு நேரில் வந்து மாணவ, மாணவிகளை பரிசோதனை செய்து முதலுதவி அளித்தனர். 

இதனையடுத்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 30 மாணவர்கள், 13 மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் மாணவர்களின் பாதுகாப்பில் பெரும் அலட்சியம் காட்டியதாகக் கூறி, பின்வரும் மூன்று ஊழியர்களைப் பணியிடை நீக்கம் (Suspend) செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்:


மனோகரி - சமையலர்.
கமலா - உதவியாளர்.
கௌசல்யா - சத்துணவு அமைப்பாளர்.

தற்போதைய நிலை:

உடல்நலம் பாதிக்கப்பட்ட 44 மாணவர்களுக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தின் தரத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமையல் அறைகளில் சுகாதாரத்தைப் பேணுவதில் தவறு செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.