இது ரொம்ப புதுசா இருக்குனே..! லஞ்சம் வாங்கிய கணவர் நீக்கம்; அதே பதவியை மனைவிக்கு தந்த த.வெ.க..!

 
1

​செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகவும், த.வெ.க., செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் வீராசாமி. இவர் ஒப்பந்ததாரர் நவீன் என்பவரிடம் பணி உத்தரவு மற்றும் பணிகளுக்காக 'ஜி-பே' மூலம் ரூ.1 லட்சமும், நேரில் ரூ.30 ஆயிரமும் லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.​இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளங்களில் பரவியது. இதையடுத்து, வீரா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.​

​கணவர் லஞ்ச வழக்கில் சிக்கி நீக்கப்பட்ட சில நாட்களிலேயே, அவர் வகித்து வந்த அதே 'செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர்' பதவி, அவரது மனைவி ஹேமாவதிக்கு வழங்கப்பட்டு த.வெ.க., சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. வீராசாமி ஒப்பந்ததாரரிடம் லஞ்சப் பணம் வாங்கும் போது, பக்கத்திலேயே அவரது மனைவி ஹேமாவதியும் அமர்ந்திருந்ததாக அந்த வீடியோ காட்சிகளில் பதிவாகியிருந்தது. லஞ்ச விவகாரத்தில் தொடர்புடைய நபரின் மனைவிக்கே மீண்டும் அதே பொறுப்பைத் தூக்கிக் கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மற்றும் த.வெ.க., தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.