இது தான் நம்ம சென்னை - வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்ட வீடியோ..!
கோயம்பேடு மெட்ரோ ரயிலில் மாற்றுத்திறனாளி ஒருவர் எளிதான முறையில் வீல் சேர் பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டது குறித்து வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த வீடியோவை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இது தொடக்கம்தான். 2030க்குள் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நடைப்பாதை, மரங்கள் கொண்ட 'Complete Streets' உருவாக்கப்படும் என்பதை StalinStatement எனும் எனது 14 அம்சத் தொலைநோக்குத் திட்டத்தில் அறிவித்திருக்கிறேன். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் உட்கட்டமைப்பில் உலகளவில் நம் நகரங்கள் உயரும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடக்கம்தான். 2030-க்குள் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நடைப்பாதை, மரங்கள் கொண்ட 'Complete Streets' உருவாக்கப்படும் என்பதை #StalinStatement எனும் எனது 14 அம்சத் தொலைநோக்குத் திட்டத்தில் அறிவித்திருக்கிறேன்!… https://t.co/hAazJ1kjYB
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 16, 2026



