’கூலி’ ரீலிஸ் தேதி இது தான்..! எப்போ தெரியுமா ?

 
1

 நடிகர் ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகி வந்த ‘கூலி’ . இப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், நாகார்ஜுனா, செளபின் சாகீர், உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்த நிலையில், ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் என படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி வியாழக்கிழமை படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பதால், கூலி நிச்சயம் வசூல் சாதனை பட்டியலில் இடம்பெறும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் என படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரும் என்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.