திமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர இதுதான் காரணம்! - தவெக-வை எச்சரிக்கும் நயினார் நாகேந்திரன்!
பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
இது “சிறுபான்மையினர்களின் அரசு” என்று நீங்கள் கூறிக்கொள்வது, பெரும்பான்மையினர்களை ஒடுக்கவா முதல்வரே?
"சனாதனத்தை ஒழிப்பதற்காகவே களத்தில் இறங்கியுள்ளோம்" என்று தவெகவைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
மக்களின் மதநம்பிக்கை குறித்து கண்டனத்திற்குரிய வகையில் பேசுவது தான் தவெக முன்வைக்கும் மாற்றமா? தங்கள் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக கருத்து தெரிவிக்கும் போது, அதனைக் கண்டுகொள்ளாமலிருப்பது தான் "அனைவருக்குமான அரசு" என்று விளம்பரப்படுத்தும் ஒரு அரசின் லட்சணமா?
ஆளுங்கட்சி என்ற நிலையில் இந்து மதத்தை இழிவுபடுத்திய பாவத்தால் தான் இன்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது திமுக. அதே வீழ்ச்சியைத் தவிர்க்கும் பொருட்டாவது, இது போன்ற தேவையற்ற கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவெக தவிர்க்க வேண்டும்! மேலும், மக்களின் மதநம்பிக்கைகளைக் காயப்படுத்திப் பேசிய கட்சி உறுப்பினர் மீதும் கடும் நடவடிக்கையை எடுப்பதோடு, இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாது இருக்கும் வகையில் உரிய நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்!
இது “சிறுபான்மையினர்களின் அரசு” என்று நீங்கள் கூறிக்கொள்வது, பெரும்பான்மையினர்களை ஒடுக்கவா முதல்வரே?
— Nainar Nagenthran (@NainarBJP) May 14, 2026
"சனாதனத்தை ஒழிப்பதற்காகவே களத்தில் இறங்கியுள்ளோம்" என்று தவெகவைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
மக்களின் மதநம்பிக்கை குறித்து…