விஜய் டெல்லி பயணத்திற்கு இதுதான் காரணம் - காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை..!

 
1

த.வெ.க தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை 4 மணியளவில் சந்திக்க உள்ளார். 

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மாலை 4 மணியளவில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பிற்கு பிறகு விஜய் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜயை சந்திக்க மத்திய அமைச்சர் அமித்ஷா நேரம் ஒதுக்கீடு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மோடியுடன் சந்திக்க இருக்கும் நேரத்திற்கு தகுந்தார் போல அமித்ஷா உடனான சந்திப்பிற்கான நேரம் அமையும் என தெரிகிறது.

2014 ஆம் ஆண்டு கோவையில் மோடியை நேரில் சந்தித்தார் விஜய் அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தமிழக முதல்வராக டெல்லி சென்று அவரை சந்திக்கிறார். இருவரின் சந்திப்பில் முந்தைய சந்திப்பு பற்றிய விசாரிப்புகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, “யார் முதலமைச்சராக வந்தாலும் பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்திப்பார்கள். மேகதாது அணை குறித்து தொடர்ந்து போராடி வருகிறோம். அதை தமிழ்நாடு முதல்வரும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கிறோம். மேகதாது விஷயத்தில் தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக கர்நாடக அரசு செயல்பட்டால் நாங்கள் எதிர்ப்போம். தமிழ்நாடு மக்களுக்காக தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உள்ளது. கர்நாடக காங்கிரஸ் கமிட்டி எதை செய்தாலும் அதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்றுக் கொள்ளும் என்று பொருள் கிடையாது” என்றார்.