இது தான் டூவீலர் விலை உயர்வுக்கு காரணம் - பஜாஜ் நிர்வாக இயக்குநர் ராஜீவ்..!
May 4, 2024, 06:15 IST1714783553000

மத்திய அரசின் ஜிஎஸ்டி தான் இந்தியாவில் வாகனங்களின் விலை உயர்வுக்கு காரணம் என பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் விமர்சித்துப் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
மத்திய அரசின் அதிகப்படியான விதிமுறைகள் மற்றும் அதிக ஜிஎஸ்டி விகிதங்களே வாகனங்களின் கணிசமான விலை உயர்வுக்குக் காரணம்.பிஎஸ்6 போன்ற எரிபொருள் தரநிலைகளை தான் எதிர்க்கவில்லை, ஆனால் இரு சக்கர வாகனங்களுக்கு 28 சதவீத உச்சபட்ச ஜிஎஸ்டி தேவையா?
இந்தியாவின் ஜிஎஸ்டி விகிதங்களை ASEAN (தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான சங்கம்) மற்றும் பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிட்ட ராஜீவ் பஜாஜ்,அந்த நாடுகளில் வாகனங்களுக்கு 8% முதல் 14% வரை மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18% அல்லது 12%-ஆக மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றார்.