உல​கின் மிக விலை உயர்ந்த அரிசி இது தான்...! விலை கேட்டா ஷாக் ஆய்டுவீங்க ..!

 
1 1

 ஒவ்​வொரு நாடும் தனித்​து​வ​மான அரிசி வகைகளை உற்​பத்தி செய்​கின்​றன. இவை பெரும்​பாலும் எல்​லோ​ராலும் வாங்​கக் கூடிய விலை​யிலேயே கிடைக்​கின்​றன. என்​றாலும் ஜப்​பானின் கின்​மேமை பிரீமி​யம் அரிசி ஒரு ஆடம்பர பொருளாக விளங்​கு​கிறது.இந்த அரிசி கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.

இதன்படி, இந்த அரிசி விலை கிலோ ஒன்றின் விலை 12,500 ரூபாயாக உள்​ளது. அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த புதியவகை அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.கின்மேமை பிரீமியம் என அழைக்கப்படும் இந்த அரிசிதான் உலகில் மிகவும் விலையுயர்ந்த அரிசியாக உள்ளது.

சமைப்பதற்கு முன் அரிசியை எல்லோரும் இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக கழுவி சுத்தம் செய்வார்கள். ஆனால், ஜப்பானிய கின்மென்மாய் பிரீமியம் அரிசி முன்பே சுத்தம் செய்யப்பட்டு வருவதால் சமைப்பதற்கு முன்பு இதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த அரிசி, வழக்கமான அரிசியை விட ஆறு மடங்கு அதிகமாக லிப்போபாலிசாக்கரைடுகளை கொண்டுள்ளது. இந்தச் சேர்மம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஆரோகியத்தை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இந்த அரிசி  ஜப்பானின் கோஷிஹிகாரி  பிராந்தியத்தில் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் தானியங்கள், வழக்கமான அரிசியை விடப் பெரும்பாலும் பெரிய அளவில் இருக்கும். இந்த பிராந்தியம் மலைகள் மற்றும் குன்றுகளால் சூழப்பட்டுள்ளதால் இங்குள்ள வெப்பநிலை உற்பத்திக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. ஜப்பானிய கின்மென்மாய் பிரீமியத்தின் ஒவ்வொரு அரிசி மணியும் அதன் உயர்ந்த உயிர் ஆற்றல் மற்றும் கலப்பு இணக்கத்தன்மை ஆகியவற்றிற்காக கையால் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

டோயோ ரைஸ் கார்ப்பரேஷனின் தலைவரான கெய்ஜி சைகா என்பவர்தான் கடந்த 2016 -ஆம் ஆண்டு கின்மென்மாய் பிரீமியத்தை அறிமுகப்படுத்தினார். அப்போது, அவர் 840 கிராம் கொண்ட ஒரு பெட்டியை இந்திய ரூபாய் மதிப்பிற்கு ரூ.5,490-க்கு விற்பனை செய்துள்ளார். அதே நேரத்தில் வழக்கமான அரிசி வகைகள் ஒரு கிலோ ரூ.173 முதல் ரூ.232 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.  ஒரு கிலோ கின்மென்மாய் பிரீமியம் அரிசி தற்போது ரூ.12557-க்கு விற்பனை செய்யப்படுகிறது..