உங்ககூட கடைசியா எடுத்த போட்டோ இது தான் :ரோபோ ஷங்கர் அண்ணன் மகள்..!

 
1 1

ரோபோ ஷங்கர் அண்ணன் மகள் இந்து தனது பிறந்த நாளில் சித்தப்பா ரோபோ ஷங்கருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் பிற புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது, என் பிறந்தநாளில் தான் நாம் கடைசியாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். மற்ற புகைப்படங்கள் நீங்கள் இல்லாமல் அக்டோபர் 4ம் தேதி எடுத்தது. என் வாழ்க்கையின் சிறந்த மனிதர். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாத மனிதன். அன்பு ஒன்று போதும் அவருக்கு. அவரின் புகைப்படம் என்னை கவனிப்பது போன்று இருக்கிறது என்று கண்ணீர் விடும் எமோஜிகளை தட்டிவிட்டுள்ளார்.

தன் மகள் போன்றே தன் வீட்டில் பல வருடங்கள் தங்கிய அண்ணன் மகள் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார் ரோபோ ஷங்கர். அவர் இப்படி 46 வயதிலேயே இறந்துவிடுவார் என்று யாரும் கனவில் கூட நினைக்கவில்லை. இந்நிலையில் ஆரம்ப காலத்தில் ரோபோ வேடமிட அவர் தன் உடம்பில் பூசிய மெட்டாலிக் பெயிண்ட்டும் மரணத்திற்கு காரணம் என்று திரையுலக பிரபலங்கள் சிலர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.ஆனால் ரோபோ ஷங்கரின் மரணத்திற்கு காரணம் ரோபோ வேஷம் இல்லை என்று தற்போது தெரிவித்துள்ளார் அவரின் மகள் இந்திரஜா.