இதுவே முதல்முறை..! யூடியூபில் முதல்முறையாக TNPL நேரலை!
TNPL கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றிலேயே முதல்முறையாக யூடியூப் தளம் மூலம் நேரலை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ஸ்ரீனிவாசராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றிலேயே முதல்முறையாக, இந்த ஆண்டின் டிஎன்பிஎல் தொடர் முழுமையாக யூடியூப் (YouTube) தளம் மூலம் நேரலை செய்யப்பட உள்ளதாகத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ஸ்ரீனிவாசராஜ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்திய அளவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்று, டிஜிட்டல் தளமான யூடியூப்பில் அதிகாரப்பூர்வமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய முயற்சியின் மூலம் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், எவ்வித தடையுமின்றி டிஎன்பிஎல் போட்டிகளைத் தங்களது மொபைல் மற்றும் கணினிகளில் இலவசமாகக் கண்டு களிக்க முடியும். இந்த அறிவிப்பு உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

