இதுவே முதல்முறை..!! திமுக மாணவரணிக்கு முதல்முறையாக பெண் செயலாளர்..!!
Mar 13, 2026, 10:17 IST1773377272319
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுதினம் காலை 10.30 மணி அளவில் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அதில், அனைத்து மாவட்டச் செயலாளர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திமுக மாணவரணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக மாணவரணி துணைச் செயலாளராக இருந்த ஜெ.வீரமணி, மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண் ஜெ.வீரமணி என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக மாணவரணியின் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.
#அரசியல்POST | திமுகவின் மாநில மாணவரணி செயலாளராக பெண் நிர்வாகி நியமனம்#SunNews | #DMK | #CMMKStalin pic.twitter.com/M7vHvgHHyV
— Sun News (@sunnewstamil) March 13, 2026
#அரசியல்POST | திமுகவின் மாநில மாணவரணி செயலாளராக பெண் நிர்வாகி நியமனம்#SunNews | #DMK | #CMMKStalin pic.twitter.com/M7vHvgHHyV
— Sun News (@sunnewstamil) March 13, 2026