காரைக்குடி தொகுதி வேட்பாளர் இவருதாங்க... வாக்கு சேகரித்த தவெகவினரால் பரபரப்பு
காரைக்குடி தொகுதியில் 2026 இல் போட்டியிடும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் டாக்டர் பிரபு அவர்களுக்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என தமிழக வெற்றி கழக கண்ணங்குடி ஒன்றிய செயலாளர் பிரச்சாரம் செய்து பேசியது மற்ற கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான போட்டியிடுபவர்களை பல்வேறு அரசியல் கட்சியினர் விருப்ப மனுக்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு மாவட்டங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி தொகுதியை மட்டும் விட்டுவிட்டு மற்ற தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு நிலை வருகிறது.
இந்நிலையில் கண்ணங்குடி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் ஏலே எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பனை விதை நடும் விழா நடைபெற்றது இந்த விழாவில் சிவகங்கை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் டாக்டர் பிரபு தலைமையில் நடைபெற்றது. இதில் கண்ணங்குடி ஒன்றிய செயலாளர் அசோகன் அங்கிருந்த பொதுமக்களிடம் பேசிய போது, காரைக்குடிக்கு தமிழக வெற்றி கழக வேட்பாளர் நமது டாக்டர் பிரபு போட்டியிடுவதாகவும், அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் ,சட்டசபை நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக உங்களை எல்லாம் அழைத்து செல்ல இருப்பதாகவும்,அதிக வாக்குகள் வாங்கும் பூத்து ஏஜெண்டுகளுக்கு இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்குவதாகவும் தெரிவித்தார். இதனால் அங்கிருந்த தாவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மற்ற கட்சிகள் வேட்பாளரை அறிவிக்காத நிலையில் டாக்டர் பிரபு பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்டு வருவது மற்ற கட்சி நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


