இது தவெக அரசின் புஸ்வாண பட்ஜெட் - முதல்வர் விஜய்யின் பட்ஜெட்டை வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின், இபிஎஸ்..!

 
1

சென்னை தலைமைச் செயலகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “சிறந்த பட்ஜெட்டை அறிவிப்போம் என்று தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர். ஆனால், பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இடம்பெறாதது மிகப் பெரும் ஏமாற்றமாக உள்ளது. ஒரு சில மாற்றத்தை செய்வோம் என கூறி ஏற்கனவே உள்ள திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

தவெக ஆட்சி அமைந்து 85 நாட்களில் இதுவரை எந்த பொதுத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. வசனத்தை பேசியே நாட்களை ஓட்டிவிட்டனர். எல்லாவற்றிற்கும் ரீல் விடுவது தான் வேலையாக உள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்கள் எதிர்பார்த்த திட்டங்கள் நிறைவேற்றப்படும் என வீர வசனம் பேசிவிட்டு நிதிநிலை அறிக்கையில், எந்தவொரு திட்டமும் இடம்பெறவில்லை. மேலும் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

சட்டமன்றத் தேர்தலின்போது முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 வழங்கப்படும், ஆண்டுக்கு குடும்பத்திற்கு ஆறு சிலிண்டர்கள் வழங்கப்படும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் எனக் கூறியிருந்தனர். மேலும் விவசாய பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறிவிட்டு சிறிய அளவில் தள்ளுபடி செய்துள்ளனர். இப்படி பல திட்டங்களை அறிவித்தனர். ஆனால் அந்த திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை பட்ஜெட்டில் தெரிவிக்கவில்லை, புதிய திட்டங்களும் இல்லை.

வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை இருப்பதாக கூறிவிட்டு, அதை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று விளக்கம் அளிக்கவில்லை. ஏற்கெனவே இருந்த திமுக அரசு நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கு நிபுணர் குழு அமைப்பதாக அறிவித்தனர். ஆனால் அந்த குழு அமைக்கப்பட்ட பிறகு ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கினார்கள். அதேபோல் தற்போது தவெக நிதி நிலையை சரிசெய்ய நிபுணர் குழு அமைக்கப்படும் என்று கூறுகிறார்கள், எப்படி சரி செய்ய முடியும்?” என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசுகையில், “தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் குறுகிய காலத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். இதுபோன்ற நிலையில் எப்படி வருவாயை பெருக்க முடியும்?. மேலும் 10 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய் கடனை எப்படி அடைக்கப் போகிறார்கள் என்ற விளக்கம் இல்லை. இந்த சூழலில் தவெக அரசு கடன் வாங்கி தான் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை உள்ளது. அளவுக்கு மீறி கடன் பெற்றால் மாநில அரசின் நிலைமை என்னவாகும்?. அதிமுக ஆட்சிக் காலத்தில் கடனை அதிகமாக பெறாமல் திறமையான அரசாக நடைபெற்றது. இன்றைய பட்ஜெட்டுக்கு முழுமையாக மதிப்பெண் தர வேண்டும் என்றால் பூஜ்ஜியம் என தரலாம்” என்று இபிஎஸ் கூறினார்.

’தவெக அரசின் புஸ்வாண பட்ஜெட்’ - மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவரது பதிவில், 'சட்டமன்றத்தில் இன்று வாசிக்கப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், 'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படி தான் உள்ளது.

அதுமட்டுமல்ல, இது திராவிட மாடல் அரசின் திட்டங்களின் ரிமேக் வெர்ஷன் பட்ஜெட். மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்சனை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சனை, விலைவாசி உயர்வுப் பிரச்சனை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்.

வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை இருப்பதாக கூறிவிட்டு, அதை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று விளக்கம் அளிக்கவில்லை. ஏற்கெனவே இருந்த திமுக அரசு நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கு நிபுணர் குழு அமைப்பதாக அறிவித்தனர். ஆனால் அந்த குழு அமைக்கப்பட்ட பிறகு ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கினார்கள். அதேபோல் தற்போது தவெக நிதி நிலையை சரிசெய்ய நிபுணர் குழு அமைக்கப்படும் என்று கூறுகிறார்கள், எப்படி சரி செய்ய முடியும்?” என கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமல்ல, ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட். மொத்தத்தில் சொந்தமாகவும் யோசிக்காத, சொன்னதையும் செய்யாத, சுரத்தில்லாத, புஸ்வாண பட்ஜெட்டாகத் தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது” என தெரிவித்துள்ளார்.