'இது முடிவல்ல தொடக்கம்' - விஜய பிரபாகரன் பதிவு

 
tn

விருதுநகர் தொகுதியில் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் வெற்றிபெற்றுள்ளார்.காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மூன்று லட்சத்து 85 ஆயிரத்து 256 வாக்குகள் பெற்றுள்ளார் . அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மூன்று லட்சத்து  80 ஆயிரத்து 877 வாக்குகளை பெற்றுள்ளார்.  

vijaya prabhakaran

இருவருக்கும் ஆன வாக்கு வித்தியாசம் 4379 ஆகும்.  பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 271 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.  இதன் மூலம் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் , விஜய பிரபாகரன் தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர். 

fffஇந்நிலையில் விஜய  பிரபாகரன் தனது சமூக வலைதள பக்கத்தில், மன்னித்து விடுங்கள் சிறிய வித்தியாசத்தில் தோற்றுவிட்டேன். எனக்கு வாக்களித்த அனைத்து அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி.  இது முடிவு கிடையாது  தொடக்கம் தான் என்று பதிவிட்டுள்ளார்.