இந்த உருட்டல், மிரட்டலுக்கு பயப்படக்கூடிய கட்சி தவெக அல்ல; அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி..!

 
1

சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் அடிக்க பாய்கிறார். எ.வ.வேலு அவரை தடுக்கிறார். பூண்டி கலைவாணன் அடிப்பதற்காக வருகிறார். இந்த உருட்டல் மிரட்டலுக்கு பயப்படக்கூடிய கட்சி தவெக அல்ல.

இது போன்று அநாகரிகமாக, உருட்டல், மிரட்டல் என இப்படி எல்லாம் செய்ததால் தான் தமிழக மக்கள் தகுந்த தீர்ப்பை கொடுத்து உங்களை அங்கு உக்காற வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.

இந்த வேலை எங்களிடம் நடக்காது. சபாநாயகருக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. ஒரு கண்ணியம் இருக்கிறது. அவர் எழுந்தால் அனைவரும் அமர வேண்டும். இப்பொழுதும் இதே தான். உக்காந்து பேசுங்கள். அவர் சபாநாயகர்; அது கண்ணியம் மிக்க பதவி, கொறடா ஒரு முக்கியமான பதவி. இப்பொழுதும் எழுந்து நின்று ஒருமையில் பேசுகிறார். இது எல்லாம் நாகரிகம் கிடையாது. இதைதான் உங்கள் தலைவர்கள் கற்றுக் கொடுத்தார்களா?எம்எல்ஏக்கள் கண்ணும், கருத்துமாக பேசும் போது தங்களுடைய கருத்துக்களுக்கு ஆதாரத்தோடு பேச வேண்டும்;

ஆதாரம் கேட்கலாம்; 5 முறை எம்எல்ஏ அறிமுக உரையில் குறுக்கீடு செய்து பேசிவிட்டார்கள். உட்கார்ந்து பேசுங்கள். இவ்வாறு ராஜ்மோகன் பேசினார்.

v