முத்துவின் காதலி இவர்தான்... விரைவில் நிச்சயதார்த்தம்!

 
1

கடந்த சில மாதங்களுக்கு தொடர்ச்சியாக சீரியல் நடிகர் - நடிகையர் திருமணம் நடந்த நிலையில் புதிதாக சேர்ந்திருக்கிறது 'சிறகடிக்க ஆசை' - 'பொன்னி' ஜோடி.

டிக் டாக் மூலம் பிரபலமடைந்து 'ராஜா ராணி' சீரியலில் ஹீரோவின் தங்கையாக நடித்து தற்போது 'பொன்னி' சீரியலில் நாயகியாக நடித்துவரும் வைஷூ சுந்தரை கடந்த இரு மாதங்களாக காதலித்து வருவதாக இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் வெற்றி வசந்த். இவரது முழுப் பெயர் வைஷ்ணவி.

அதுமட்டுமின்றி இந்த வாரத்தில் தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வெற்றி வசந்த் மற்றும் வைஷு சுந்தருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.