அனுஷ்காவின் ஒரிஜினல் பெயர் இதுதான்!

 
1 1

தெலுங்கில் நாகர்ஜூனா நடிப்பில் வெளியான சூப்பர் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அனுஷ்கா ஷெட்டி தனது தனித்துவமான திறமையாலும் வசீகரிக்கும் அழகாலும் தென்னிந்திய சினிமாவை மாற்றியமைத்துள்ளார். 'அருந்ததி' திரைப்படம் அவருக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொடுத்தது.

தற்போது 43 வயதாகும் அனுஷ்கா ஷெட்டி,சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் 6-ம் வகுப்பு படித்தபோது, ஒரு பையன் என்னைக் காதலிப்பதாகச் சொன்னான். அந்த வயதில் அதன் பொருள் என்னவென்று எனக்குப் புரியவில்லை, ஆனாலும் நான் 'சரி' என்று சொன்னேன். அவை மிகவும் இனிமையான நினைவுகள்" என்று அவர் கூறினார்.

இதனிடையே பழைய பேட்டி ஒன்றில், தனது உண்மையான பெயர் குறித்து பேசிய அனுஷ்கா, எனது பெயது ஸ்வீட்டி ஷெட்டி தான். ஆனால் அந்த பெயர் எனக்கு பிடிக்கவில்லை. எல்லோரும் ஸ்வீட்டி, ஹனி என்று கூப்பிடுவார்கள் அது எனக்கு பிடிக்காது. எப்படி மாற்றலாம் என்று யோசித்தேன். சூப்பர் படத்தில் நடிக்கும்போது நாகர்ஜூனா 2-3 நாட்கள் தான் டைம் இருக்கு பெயரை மாற்ற வேண்டும் என்றால் மாற்றிக்கொள் என்று சொன்னார். அப்போது என் அப்பாவிடம் கேட்டேன் அவர் என் இஷ்டம் என்று சொன்னார். அதன்பிறகு நாகர்ஜூனா, சோனு சூட், இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் என் பெயரை அனுஷ்கா என்று மாற்றினார்கள்.