இது மக்களுக்கும் கோபாலபுர ஊழல்வாதிகளுக்கும் இடையிலான தேர்தல்..! - மதுரையில் அண்ணாமலை பேட்டி..!

 
annamalai

மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளித்த பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை:

மதுரையில் உள்ள இரண்டு அமைச்சர்கள், மெட்ரோ திட்டம் குறித்து பொய் பிரசாரம் செய்கின்றனர். உண்மையிலேயே மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கேட்டிருந்தால், மத்திய அரசுக்கு தி.மு.க., அரசு அனுப்பிய கடிதத்தை வெளியிட வேண்டும். நாங்கள் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததும், புதிதாக தெளிவான திட்ட அறிக்கையை அளித்து, மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு தருவோம்.

தி.மு.க., அரசு நம்பர் ஒன் என்று சொல்கிறார். தமிழகத்தை அதல பாதாளத்திற்கு தள்ளியதுதான், தி.மு.க., அரசின் நம்பர் ஒன் சாதனை.நெல்லுக்கு ஊக்கத் தொகையை நிறுத்துங்கள் என கடிதம் எழுதவில்லை' என மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், 'மத்திய நிதி அமைச்சர் எழுதிய கடிதத்தை வெளியிடுவோம்' என ஸ்டாலின் கூறுகிறார். அந்த கடிதத்தை வெளியிடுவாரா? 'இல்லாத கடிதம்' பற்றி தேர்தல் நேரத்தில் பேசுகிறார் முதல்வர்.தமிழகத்தில் நிலவும் எத்தனையோ பிரச்னைகளை பற்றி கவலையின்றி, ஐ.பி.எல்., பார்ப்பதுதான் முதல்வர் ஸ்டாலினுக்கு வேலையா? டில்லிக்கும் தமிழகத்திற்கும் தான் தேர்தல்' என முதல்வர் அடிக்கடி கூறுகிறார்.

ஆனால், அப்படி அல்ல; கோபாலபுர ஊழல்வாதிகளுக்கும் தமிழக மக்களுக்கும் இடையில் நடக்கும் தேர்தல் தான் இது. இவ்வாறு கூறினார்.