#DDlogo பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை - மு.க.ஸ்டாலின்
Updated: Apr 21, 2024, 12:31 IST1713682901346
மத்திய அரசின் மேற்பார்வையில் உள்ள பிரசார் பாரதி நிறுவனம், தனது இந்தி செய்தி சேனலான தூர்தர்ஷன் (டிடி இந்தியா நியூஸ் சேனல்) லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றியுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சியினரும் மற்ற ஊடகவியலாளர்களும் தங்களது கண்டனங்களை நேற்று முதல் தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து தனது கடும் கண்டனத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில்,"உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்;
தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;
வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;
பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்;
தற்போது #Doordarshan இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்!
தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்" என்று தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்;
— M.K.Stalin (@mkstalin) April 21, 2024
தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;
வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;
பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்;
தற்போது… pic.twitter.com/o0JU8oEaYE