“நக்கல் எல்லாம் வேணாம்... ஒழுங்கா நிற்க தெரியாதா? அதிகாரிங்க வராங்கன்னா! எப்படி பேசணும் முதல்ல தெரிஞ்சுக்கோ”- ஊழியரை மிரட்டிய தவெக எம்.எல்.ஏ
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் குன்னத்தூர் பகுதியில் அரசு அனுமதி பெற்று இயங்கி வரும் கல்குவாரியை போளூர் தவெக எம்எல்ஏ அபிஷேக் மற்றும் அவரது சகாக்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கல்குவாரியில் வேலை செய்த ஒருவரிடம் பேசிய எம்எல்ஏ, பேப்பரை கொடுத்து அதை படிக்க சொன்னார். அப்போது அந்த நபர், அதை படிக்காமல் சாய்ந்து கொண்டு நின்று கொண்டிருந்தார். அதற்கு எம்எல்ஏ, “இந்த நக்கல் இங்கு வேணாம். ஏன் ஒழுங்கா நிக்க மாட்டீங்களா?. சும்மா சைலன்ட்டா போறாங்க இந்த நக்கல் கிக்கலாம் பண்ண கூடாது. கம்முனு இங்க ஒழுங்கா பண்ணுனு சொல்றதுக்கு தான் இங்க வந்து இருக்கேன். தம்பி உன் வயச தாண்டி தான் வந்து இருக்கேன். உன்ன மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பேன். இந்த மாதிரி எத்தனை பேர் கிட்ட நக்கலா நின்னு இருப்பேன். இதெல்லாம் வேற எங்கனா வச்சுக்க. அதிகாரிங்க வராங்கன்னா எப்படி பேசணும் முதல்ல தெரிஞ்சுக்கோ. பணிவா பேசினால் தான் வேலை நடக்கும். உன்னை கெஞ்ச சொல்லல யாரையும். இந்த மாதிரி நக்கலா பாக்குறது, நடந்துகிறது உங்க அப்பா எல்லாம் எப்படி மரியாதையா நடந்துக்கிறார் பாரு! அவங்க கிட்ட எதுனா தரகுறைவா பேசினேனா பாரு. இதெல்லாம் உங்க பசங்க சொல்லி கொடுக்க மாட்டீங்களா?” என்ன பேசிய வீடியோ நேற்று முதல் வைரலாக பரவியது.
எம்எல்ஏ முன்னாடி ஒழுங்கா நிக்க தெரியாதா
— Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@Autokabeer) May 31, 2026
நக்கல் எல்லாம் வேண்டாம் உன்ன மாதிரி நிறைய பேரை பார்த்திருக்கிறேன்
கல்குவாரி ஆய்வின் போது தொழிலாளி இடம் கொந்தளித்த போளூர் தவெக MLA.. ஆர். அபிஷேக் pic.twitter.com/MslPJXvH1S
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் போளூர் தவெக எம்எல்ஏ சேர் முன்னாடி கை கட்டி வாய் மூடி நிக்கணுமா? சிரிக்க கூடாதாமா? அவர் தவறு செய்து இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் மிரட்டுவதற்கு உங்களுக்கு எந்த அதிகாரத்தையும் அரசியல் அமைப்பு சட்டம் வழங்கவில்லை. மக்கள் தான் எஜமான் நீங்கள் மக்களின் ஊழியர் அவ்ளோதான் என்று வரிகளுடன் வைரலாக பரவி வருகிறது. மேலும் எம்எல்ஏ ஆய்வு என்ற பெயரில் அவரது ஆதரவாளர்களுடன் ஆங்காங்கே சென்று பார்வையிட்டு அதிகாரிகளை அதட்டி மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. அதிகாரிகளும் இதை அனைத்தையும் வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் சிலர் எம்எல்ஏ கல்குவாரிக்கு ஆய்வு என்ற பெயரில் சென்று மிரட்டி அழுத்தத்தை கொடுத்து மாமுலாக நடந்து கொள்ளலாம் என முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

