#BREAKING திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு
திருவனந்தபுரம் டூ மதுரை வரை இயக்கப்பட்டு வரும் "அமிர்தா எக்ஸ்பிரஸ்" ரயில் சேவை, நாளை முதல் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “திருவனந்தபுரம்-மதுரை இடையே இருமார்க்கமாக இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலை ராமேசுவரம் வரை நீட்டிக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இன்று(வியாழக்கிழமை) முதல் ராமேசுவரம் வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது. அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து இன்று(வியாழக்கிழமை) இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்.16343), மறுநாள் மதியம் 12.45 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும். மறுமார்க்கமாக, ராமேசுவரத்தில் இருந்து வருகிற 17-ந்தேதி மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில்(16344), மறுநாள் காலை 4.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
இந்த ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் நேர அட்டவணையில் இருமார்க்கமாகவும் எந்த மாற்றமும் இல்லை. எஞ்சிய ரெயில் நிலையங்களுக்கு செல்லும் நேரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில், மறுநாள் காலை 8.35 மணிக்கு திண்டுக்கல், 9.50 மணி மதுரை, 10.25 மணி மானாமதுரை, 10.50 மணி பரமக்குடி, 11.13 மணி ராமநாதபுரம், 12.45 மணி ராமேசுவரத்திற்கும் செல்லும். மறுமார்க்கமாக, ராமேசுவரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் மதியம் 2.13 மணிக்கு ராமநாதபுரம், 2.38 மணி பரமக்குடி, மாலை 3.05 மணி மானாமதுரை, மாலை 4.05 மணி மதுரை, மாலை 5.05 மணிக்கு திண்டுக்கல், அதன்பின் வழக்கம்போல மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


