திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் - 2 நாட்களில் 18,000 பேர் வருகை

 
t

திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு குமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது  133 அடி உயரச் சிலையை அமைத்து கொடுத்தது.  இந்த சிலை கடந்த  2000ஆம் ஆண்டு ஜனவரி 1 இல் திறக்கப்பட்டது. அதேபோல் விவேகானந்தர் நினைவு மண்டபம் தமிழ்நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் பாறையின் மேல் அமைந்துள்ளது. 1892ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி கன்னியாகுமரி வந்த விவேகானந்தர் கடலுக்குள் நீந்திச் சென்று அங்கிருந்த பாறையில் மூன்று நாட்கள் கடும் தவம் இருந்த இடத்தில் இம்மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

tn

கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையின் மேல் அமைக்கப்பட்டுள்ள இம்மண்டபத்தினுள் விவேகானந்தரின் முழு உருவ வெண்கலச் சிலையும், விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பின் பகுதியில் மண்டபத்தின் கீழே ஒரு தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இது விவேகானந்த கேந்திரம் எனும் அமைப்பின் பராமரிப்பில் உள்ளது. வள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் இரண்டிற்கும் சுற்றுலா பயணிகள் படகுகள் மூலம் அழைத்து செல்லப்படுவது வழக்கம். 

tn

நிலையில் கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் அமைந்துள்ள, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை கடந்த 2 நாட்களில் மட்டும் 18,000 பேர் சுற்றுலா படகில் சென்று ரசித்துள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.