”பாஜக நிர்வாகிகள் இடையே பைத்தியக்காரத்தனம் தலைவிரித்து ஆடுகிறது”

 
Annamalai

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக உண்மைக்கு மாறான வீடியோவை பரப்பிய பாஜக நிர்வாகி பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டு இருப்பதாக திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் காரனுக்கு கூட தரவில்லை திமுகவினருக்கு 7 சீட்டுகளை கொடுத்தேன் -  காங்கிரஸ் செயல் தலைவர்

முதலமைச்சர் சாலை விரிவாக்கம் திட்டத்தின் கீழ் மணவாளநகர் முதல் மேல் நாளாத்தூர் வரை 4.3 கிலோமீட்டர் தொலைவில் 49 கோடி ரூபாயில் நான்கு வழி சாலையாக விரிவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. அத்தகைய சாலை பணியை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், “நெடுஞ்சாலை துறையில்  தானும்
ஏற்கனவே பணியாற்றி இருப்பதால் சாலை பணிகள் தொடர்பாக தனக்கு ஏற்கனவே தெரியும். தற்போது நடைபெற்று வரும் சாலை பணியில்  சில இடங்களில் வேலை சரியாக  நடைபெறவில்லை. அவையெல்லாம் மாற்றி அமைக்கப்பட்டால் தான் இது முழுமையான சாலையாக அது இருக்கும். மேல்நலத்தூர் பகுதியில் உள்ள பன்னாட்டு ஜேசிபி இயந்திரம் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியில் வடிகால் நீர் செல்வதற்கான பாதை அடைப்பு இருக்கிறது. 

இன்னும் ஆறு மாத காலத்திற்குள் சாலை விரிவாக்க பணி முடிவடையும். புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக உண்மைக்கு மாறான செய்தியை ஒளிபரப்பிய பாஜக நிர்வாகி பைத்தியக்காரன் தனமாக செய்துள்ளார். அதேபோன்று தமிழ்நாட்டில் பாஜக நிர்வாகிகள் இடையே பைத்தியக்காரத்தனம் தலைவிரித்து ஆடுகிறது” என்றார்.