ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் உயிரிழப்பு!
Updated: Apr 2, 2025, 10:03 IST1743568410179

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர். கணவன் - மனைவி மற்றும் குழந்தைகள் 2 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகன மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒரு சிறுவன் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
அந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த 3 பேரில் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.