திருப்பரங்குன்றம் மலை விவகாரம்- ஒன்று கூடிய இந்து அமைப்பினரால் மதுரையில் உச்சகட்ட பரபரப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணியர் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் திருப்பரங்குன்றம் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்த நிலையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் முழுவதும் மலையை சுற்றி 800-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லக்கூடிய இரண்டு பாதைகளிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் முருகன் மலையை மீட்போம் என இந்து அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட தோஷங்கள் எழுப்பியவாறு கோவில் வளாகத்துக்குள்ளே கட்சி கொடியுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்தனர். இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த இந்து அமைப்பு சேர்ந்தகளை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நீதிமன்றம் மதுரை பழங்காநத்தம் சந்திப்பில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கியது மாலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணி வரை இந்த போராட்டம் நடைபெற்றது.