“காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என திருச்சி சிவா பேசியிருக்க கூடாது”- திருநாவுக்கரசர்

 
Thirunavukarasar Thirunavukarasar

காமராஜர் அவர்களைப் பற்றி வந்துள்ள திருச்சி சிவா M.P. அவர்களின் விமர்சனங்கள் தேவையில்லாதது, அவசியமற்றது, கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

Congress appoints Thirunavukkarasar as election observer in Telangana.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாதாரண குடும்பத்தில், சிறிய நகரில் பிறந்து இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்து, இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கும், உலகத் தலைவர்களில் ஒருவராக திகழந்தவரும்,  முன்னாள் பாரதப் பிரதமருமான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக திகழ்ந்து,  தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக பணியாற்றி நேர்மையின் சின்னமாக, தூய்மையின் அடையாளமாக, உழைப்பின் மறுவடிவமாக திகழ்ந்த தூயத் தலைவர் அமரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களைப் பற்றி வந்துள்ள திருச்சி சிவா M.P. அவர்களின் விமர்சனங்கள் தேவையில்லாதது, அவசியமற்றது, கண்டனத்திற்குரியது.


பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நாட்டிற்காக சிறை சென்றும், பட்டி தொட்டிகளிலும், மரத்தடியிலும், கொட்டகைகளிலும் உறங்கியும், கால் கடுக்க நடந்தும், காங்கிரஸ் கட்சியை வளர்த்து தமிழகத்தில் காங்கிரஸின் உயிராய் திகழ்ந்தவர். அப் புனிதரை  ஏ.சி. இல்லாமல் தூங்க மாட்டார் என்பதைப் போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை சிறந்த பேச்சாளரான திருச்சி சிவா அவர்கள் பேசி இருக்க கூடாது.  இவரது தேவையற்ற இந்த விமர்சனத்திற்கு காங்கிரஸ் சார்பிலும், என் சார்பிலும்   கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.