திருமாவளவன் முதன்முதலாக ஊன்றிய கட்சி கொடிக்கம்பம் அகற்றம்

 
கொடி கம்பம்

மதுரை மாவட்டம் கோ.புதூர் பகுதியில் வி.சி.க தலைவர் திருமாவளவன் ஏற்றிய முதல் கட்சிக் கொடியை இரவோடு இரவாக காவல்துறையினர் நீக்கியது சர்ச்சையாகியுள்ளது. 


விசிகவை தொடங்கியபோது முதன்முதலாக திருமாவளவனால் மதுரை மாவட்டம் கோ.புதூர் பகுதியில் கொடிக்கம்பம் ஊன்றி கட்சி கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில் அனுமதியின்றி 62 அடி உயரத்திற்கு கொடிக்கம்பத்தை உயர்த்தியதால் அக்கொடிக்கு போலீசார் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டனர். 62 அடி உயர விசிக கொடிக்கம்பத்தில் இன்று திருமாவளவன் கொடியேற்ற இருந்த நிலையில், இரவோடு இரவாக போலீசார் அதனை அகற்றினர். 


இது தொடர்பாக தகவல் கிடைத்ததும், இரவிலேயே காவலர்களுடன் விசிக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  மேலும் கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து மதுரை புதூர் பகுதியில் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.