'ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும்' - திருமாவளவன்

 
திருமாவளவன்

'மதுவை ஒழிப்போம் மனிதவளம் காப்போம்' என தான் பேசிய வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.

அதிமுக பக்கம் நெருங்குகிறேனா? அதெல்லாம் இல்ல: ஜெயக்குமாருக்கு திருமாவளவன் பதிலடி

இதுதொடர்பாக திருமாவளவன் கூறுகையில், “அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிறபோது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும். அனைத்துக் கட்சிகளும் மது வேண்டாம், போதைப் பொருள் வேண்டாம், மது விலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகின்றன. ஆனால், இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன, மது ஆலைகள் இயங்குகின்றன.  எல்லாக் கட்சிகளும் மதுவிலக்கு தேவை எனும்போது மதுக்கடைகள் ஏன் திறந்திருக்கின்றன? இதுதான் நாம் முன்வைக்கிற கேள்வி.  


அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.