ஆளுநர் தமிழ்மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டால் சரி - திருமாவளவன் ட்வீட்!!

 
thiruma

தமிழ்நாடு சர்ச்சை குறித்து விளக்கம்  அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி,  " 2023 ஜனவரி 4ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில் சமீபத்தில் நிறைவடைந்த காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாச்சார தொடர்பை கொண்டாடும் ஒரு மாத காசி தமிழ் சங்கமும் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.  அந்த நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றி பேசும்போது காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தை வார்த்தையே பயன்படுத்தினேன் அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை.   எனவே வரலாற்று பண்பாட்டு சூழலில் தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன் .

ட்

எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வது,  அனுமானம் செய்து கொள்வது தவறானது.  மற்றும் எதார்த்தத்திற்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.  எனது பேச்சின் அடிப்படை புரியாமல் ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள் விவாத பொருளாகி இருக்கிறது.  அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என்று கூறினார்.


இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், நாடா? அகமா? என அன்று விவாதத்தைக் கிளப்பியது குதர்க்கவாதம்!'நான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது' என இன்று விளக்கம் அளித்திருப்பது திரிபுவாதம்! தனது பிழையை உணர்ந்து வருந்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஆளுநர். தமிழ்மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டால் சரி.என்று குறிப்பிட்டுள்ளார்.