இந்நாள் சனாதன ஃபாசிச பயங்கரவாத ஒழிப்பு நாள் - திருமாவளவன்

 
thiruma

இன்றைய தினம்  சங் பரிவார்களின் "இந்துத்துவா" என்னும் மதவெறி ஃபாசிசம் தனது கோரமுகத்தை  வெளிக்காட்டிய நாள் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 

இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவில், ஜனவரி_30 சங் பரிவார்களின் "இந்துத்துவா" என்னும் மதவெறி ஃபாசிசம் தனது கோரமுகத்தை  வெளிக்காட்டிய நாள்.  மதசார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறினைச் சிதைக்கும் மக்கள் விரோதிகளின் மதவாதப் பயங்கரம் அரங்கேறிய நாள். 

சிறுபான்மையினருக்கு எதிரான பெரும்பான்மைவாதம் என்னும் வெறுப்பரசியலின் விளைச்சலை அறுவடை செய்த  நாள். காந்தியடிகளின் குருதியைக் குடித்த கோட்சே கும்பலின் குரூரம் கூத்தாடிய நாள். இந்நாள் 'சனாதன ஃபாசிச பயங்கரவாத ஒழிப்பு நாள் என குறிப்பிட்டுள்ளார்.