"பழம் நழுவி பாலில் விழுந்தது! திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது பெருமகிழ்வு"-திருமாவளவன்
Feb 19, 2026, 15:20 IST1771494658487
கலைஞரின் கனவு நனவாகும் வகையில் பழம் நழுவி பாலில் விழுந்தது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில், “திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது பெருமகிழ்வளிக்கிறது. இக்கூட்டணி மேலும் வலிமை மிக்கதாக மாறியுள்ளது. எம் உறுதியான வெற்றிக்கு ஏதுவாக அமையும். அரசியல் பகைவர்களின் அடிவயிறு குமையும். திமுக கூட்டணி உடையும் என்கிற அவர்களின் கனவில் மண் விழுந்தது. கலைஞரின் கனவு நனவாகும் வகையில் பழம் நழுவி பாலில் விழுந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

