தன்னை ஆசான் என பேசிய உதயநிதிக்கு திருமாவளவன் நன்றி

 
திருமா

தன்னை ‘கொள்கை ஆசான்’ எனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.

உணர்ச்சிவசப்படாமல், உள்ளார்ந்த உணர்வின் அடிப்படையிலேயே உதயநிதி தனது கருத்தை கூறியுள்ளார். அவரது கருத்தை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் எதிர்மறையான கருத்துகளைப் பேசி வருகின்றனர். எந்த தயக்கமும், நெருடலும் இல்லாமல் என்னை கொள்ளை ஆசான் என உதயநிதி கூறியுள்ளார். உள்ளார்ந்த உணர்வின் அடிப்படையில் மனம் திறந்து அரசியல் ஆசான் திருமா என உதயநிதி பேசியுள்ளார். இதனை பொறுக்க முடியாமல் பலர் எதிர்மறை கருத்து பேசுகின்றனர், விசிகவினர் எதிர்விமர்சனம் செய்யாமல் கடந்து செல்ல வேண்டும் என தொண்டர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.