" மக்கள் பாஜகவினரை விரட்டி அடித்துள்ளனர்" - திருமா கருத்து!!

 
thiruma

கர்நாடக தேர்தலில் மக்கள் பாஜகவினரை விரட்டி அடித்துள்ளனர் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

tn

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்ற நடைபெற்று வரும்  நிலையில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் பாஜக பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் 25 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் 18 தொகுதிகளிலும்,  பாஜக 6 தொகுதிகளிலும்,  மதசார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தற்போது வரையிலான வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் 43 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது.  கடந்த தேர்தலை விட தற்போதைய நிலையில் காங்கிரஸ் 6 சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

thiruma

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் , "கர்நாடக தேர்தலில் மக்கள் பாஜகவினரை விரட்டி அடித்துள்ளனர் . ஹிஜாப் விவகாரம், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து போன்றவற்றால் கடந்த தேர்தலை விட 30 தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. பிஜேபி வழக்கம்போல் குதிரை பேரம் உள்ளிட்ட ஜனநாயக விரோத செயல்களை செய்வார்கள். காங்கிரஸ் இடம் கொடுக்கக் கூடாது, கட்டுக்கோப்புடன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதிமுக இப்போதே புரிந்துகொள்ள வேண்டும்; பாஜகவுடன் சேர்வதால் அதிமுகவிற்கு எந்த ஒரு வலிமையும் இல்லை; பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக தொய்வுதான் அடையும்” என்றார்.  முன்னதாக கர்நாடக தேர்தலில் பாஜகவால் பெரும்பான்மையை பெற முடியவில்லை.  தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வந்த பிறகு தோல்விக்கான காரணத்தை அலசுவோம் என்று கர்நாடக முதல்வர் பசவராஜு பொம்மை தெரிவித்துள்ளார்.