#BREAKING தேர்தலில் போட்டியிடவில்லை... திடீரென பின்வாங்கிய திருமாவளவன்

 
 ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரஸுக்கு உரிமை உள்ளது- திருமாவளவன்

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முடிவை விசிக தலைவர் திருமாவளவன் மறுபரிசீலனை செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிதம்பரம் மக்களவைத் தொகுதி எம்பி ஆக இருக்கும் திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார். திருமாவளவன் தமிழகம் முழுவதும் பரப்புரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கூட்டணி கட்சியினர் வைத்ததாக தெரிகிறது. இதனையடுத்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முடிவை விசிக தலைவர் திருமாவளவன் மறுபரிசீலனை செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்திருந்த திருமாவளவன், இன்று வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.காட்டுமன்னார்கோவிலில் விசிக சார்பில் அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் இளமாறன்  என்பவர் வேட்பாளராக களம் இறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.