ஜனசதாப்தி ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க ரயில்வே உறுதி- விசிக போராட்டம் ஒத்திவைப்பு

 
thiruma

கோவை மயிலாடுதுறை இடையிலான ஜனசதாப்தி ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க ரயில்வே நிர்வாகம் உறுதியளித்ததை அடுத்து இன்று எனது தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற இருந்த ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். 

train

இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை - காரைக்கால் இடையே இயங்கக்கூடிய கம்பன் விரைவு இரயில், தாம்பரம் -செங்கோட்டை ரயில், ராமேஸ்வரம் - அயோத்தி ரயில் ஆகியவை சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் மற்றும் கோவை - மயிலாடுதுறை இடையிலான ஜனசதாப்தி ரயில், மைசூர் - மயிலாடுதுறை ரயில் ஆகியவற்றை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் ஆகிய எமது நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில் எனது தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தோம். 

thirumavalavan

இதனையடுத்து இன்று சிதம்பரம் துணை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விசிக பொதுச்செயலாளர் சிந்தனைசெல்வன் பங்கேற்றார். கம்பன் விரைவு ரயில், ராமேஸ்வரம் அயோத்தி ரயில்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது. கோவை - மயிலாடுதுறை ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க உறுதியளித்த ரயில்வே நிர்வாகம்  செப்டம்பர் 19ஆம் தேதிக்குள் மற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் உறுதி அளித்ததை அடுத்து இன்று எனது தலைமையில் நடைபெற இருந்த முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.