தென்னிந்தியாவில் இனி சங்கிகளுக்கு வேலை இல்லையென விரட்டியடித்த கர்நாடக மக்கள்- திருமா

 
thiruma

தென்னிந்தியாவில் இனி சங்கிகளுக்கு வேலை இல்லையென விரட்டியடித்த கர்நாடக மக்களுக்கு எமது பாராட்டுக்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

thirumavalavan

கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ்க்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள திருமாவளவன் எம்.பி. “பாஜகவின் அரசியல் எடுபடவில்லை. கர்நாடகாவில் எதிர்பார்த்ததைப் போலவே பாஜகவை மக்கள் விரட்டியடித்து இருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் மதம் சார்ந்த வாக்கு வங்கி அரசியல் கணக்கு தப்பாகி உள்ளது. இந்து சமூக மக்களே பாஜகவை புறக்கணித்துள்ளனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது. வழக்கமாக தில்லுமுல்லு செய்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து கொள்ளைப்புறமாக ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்வார்கள், அதற்கு இடம் கொடுக்காமல் நாட்டை காப்பாற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியது இன்றியமையாதது. 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் பாஜகவை இந்து சமூகமே தூக்கி எறிய போகிறது என்பதற்கு இந்த தேர்தல் முடிவு ஒரு சான்று.


கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி. சிறுபான்மையினர், தலித் மற்றும் பழங்குடியினரின் துணையோடு பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தியது. காங்கிரஸ் பெற்றுள்ள 43 சதவீத வாக்குகளில் பெரும்பான்மையானவை இந்து மக்களின் வாக்குகளேயாகும். சங்பரிவார்களின் மத அடிப்படையிலான பிரிவினைவாத அற்ப அரசியலை இந்து மக்களே புறந்தள்ளினர். தென்னிந்தியாவில் இனி சங்கிகளுக்கு வேலை இல்லையென விரட்டியடித்த கர்நாடக மக்களுக்கு எமது பாராட்டுகளையும் மனமார்ந்த நன்றியையும் உரித்தாக்குகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.